பார்த்ததில் பிடித்தது - நீயா நானா
நேற்றிரவு நீயா நானா நிகழ்ச்சியை சிறிது நேரம் பார்த்தேன். அதில் பங்கேற்றவர் ஒருவரும், சிறப்பு பேச்சாளர்களாக வந்த இருவரும் அருமையான கருத்துகளை வைத்தனர்.
பங்கேற்றவர் பேசியதில் இருந்து - "நம்முடைய குடும்ப அமைப்பு என்பது மிகவும் நல்ல விடயம், ஆனால் இன்றைய நிலையில் குடும்பம் என்பது ஒரு சிறைச்சாலை போல் ஆகிவிட்டது."
சிறப்பு பேச்சாளர் மனநல மருத்துவர் சாலினி - "எவ்வளவு பேரழகி ஆனாலும் 2-3 நாட்களிலேயே அவள் அவனுக்கு சலித்துப்போய் விடுகிறாள். ஆண்களின் குணமே புதிய விசயங்களை தேடி செல்வது. தனக்கு பிடித்த செயல் என்றால் எந்த பிரதிபலனும் பாராமல் உழைப்பது ஆணின் குணம்."
அடுத்து பேசினார் இயக்குனர் கரு. பழனியப்பன் - "ஆண்கள் பெண்களின் தொந்தரவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கிலேயே அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொடுத்துவிட்டு வெளியில் நிம்மதியுடன் செல்ல நினைக்கிறான்" என்பது போல பேசினார்." இவர்கள் பேசியதில் இருந்து எனக்கு விளங்கியது என்னவென்றால் "நம் சினிமாவில் நடிகைகள் ஏன் விரைவில் காணாமல் போகிறார்கள், கிழவன்கள் இன்னும் சூப்பர் ஸ்டார் என்று வலம் வருகிறார்கள் என்றும் தான்."